முதல் டெஸ்டில் ஸ்டுவார்ட் கிளார்க் இல்லை

திங்கள், 15 டிசம்பர் 2008 (12:31 IST)
பெர்த்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்ட்ரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் கிளார்க் காயம காரணமாக இடம்பெற மாட்டார். அவருக்குப் பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான பீட்டர் சிடில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வலது முழங்கை காயம் மீண்டும் தீவிரமடைந்ததால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட தேவையுள்ளதால் என்று அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணரிடம் கலந்தாலோசிக்கவுள்ளதாக ஆஸ்ட்ரேலிய உடற்பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

பீட்டர் சிடில் இந்தியாவிற்கு எதிராக சமீபத்தில் தனது முதல் டெஸ்ட் போட்டியை மொஹாலி மைதானத்தில் ஆடினார் என்பது குறிப்பிடத்தகக்து.

வெப்துனியாவைப் படிக்கவும்