ஆஸ்ட்ரேலியா புறப்பட்டார் ஜெஃப் லாசன்!

திங்கள், 8 செப்டம்பர் 2008 (11:44 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் பயிற்சியாளர் ஜெஃப் லாசன் அறிவிப்பு எதுவும் இல்லாமல் திடீரெஆஸ்ட்ரேலியா புறப்பட்டுச் சென்றுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் ஆஸ்ட்ரேலிய உடற்பயிற்சியாளர் டேவிட் ட்வையரும் லாசனுடன் கிளம்பிச் சென்றார். இருவரதஇந்திடீரபயணமபாகிஸ்தானகிரிக்கெடஅரங்கிலசந்தேகங்களஎழுப்பியுள்ளது.

இவர்கள் இருவரும் 10 நாட்கள் விடுமுறையில் சென்றிருப்பதாக பாகிஸ்தான் வாரியத்திற்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தாலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் சமீபத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், வீரர்களிடையே புகைச்சல் மற்றும் பொறுப்பின்மை ஆகியவை உள்ளிட்ட மற்ற விவகாரங்களால் பயிற்சி அளிக்க சிறந்த சூழல் அங்கில்லை என்று லாசன் நினைத்திருக்கலாம் என்ற பேச்சுக்களும் எழுந்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் பொறுப்பிலிருந்து நசிம் அஷ்ரஃப் விலகியதிலிருந்தே பாகிஸ்தான் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் தலையீடு அதிகரித்து வருகிறது.

மேலும் முன்னாள் வீரர்கள் பலர் ஜெஃப் லாசனின் பயிற்சிப் பொறுப்பை வெளிப்படையாகவே விமர்ச்சித்துள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு முன் ஜெஃப் லாசன் தெரிவிக்கையில், பாகிஸ்தான் பயிற்சியாளராக தனது எதிர்காலம் குறித்து கவலையில்லை, இது இல்லாவிடினும் தனக்கு பல்வேறு வாய்ப்புகள் காத்திருக்கின்றன என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

இந்த காரணங்களால் லாசனின் திடீர் ஆஸ்ட்ரேலிய பயணம் பலரிடையே சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்