புது டெல்லி: ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான ஐ.பி.எல். இருபதுக்கு 20 போட்டியில் தன் மீது ரசிகர் ஒருவர் கல்லால் அடித்தார் என்று கூறியுள்ளார் சேவாக்.
சொந்த மண்ணில் தன் மீது கல் வீச்சு நடத்தப்பட்டது வெட்கக் கேடானது என்று அவர் ஆட்டம் முடிந்த பிறகு நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.
டெக்கான் சார்ஜர்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய போதும் டெல்லி டேர் டெவில்ஸ் அணித் தலைவர் சேவாக் கல்லடி சம்பவத்தால் உற்சாகம் குன்றி காணப்பட்டார்.
அதாவது ஆட்டத்தின் 19ஆவது ஓவரின் போது எல்லைக்கோட்டருகே நின்று கொண்டிருந்த தன் மீது கல் வீசப்பட்டதாகவும் உடனே நடுவரிடம் சென்று புகார் தெரிவித்ததால் ஆட்டம் சிறிது நேரத்திற்கு நிறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆட்டத்தை நேரயாக பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஆட்டம் சில நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டதன் காரணத்தை அறியமுடியவில்லை. நடனப்பெண்மணிகளை ரசிகள் கேலி செய்திருக்கலாம் என்ற செய்திகளும் நிலவின.
ஆனால் இறுதியில் சேவாக் தன் மீது கல்வீச்சு நடத்தப்பட்ட இந்த விவரத்தை தெரிவித்தார்.