ஐ.பி.எல். இருபதுக்கு 20 போட்டியின் போது எதிரணி வீரர் சிறிசாந்தை மும்பை இந்தியன் அணித் தலைவர் ஹர்பஜன் சிங் அறைந்த விவகாரத்தை விசாரணை செய்ய வழக்கறிஞர் சுதிர் நானாவதியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நியமித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து சுதிர் நானாவதி விசாரணை நடத்தி 15 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நானாவதி அறிக்கையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சரத் பவார் பார்வைக்கு கொண்டுவந்த பிறகு ஒழுங்குக் குழுவின் நடவடிக்கைக்கு அனுப்பிவைக்கப்படும் என்று தெரிகிறது.
இதற்கிடையே இன்று ஐ.பி.எல். ஆட்ட நடுவர் ஃபரூக் இஞ்சினியர் இந்த விவகாரத்தை விசாரணை செய்யவுள்ளார்.
சக வீரர் ஒருவரை தாக்குவது ஐ.சி.சி. நடத்தை விதிமுறைகளின் படி தண்டனைக்குரியதாகும். அதிகபட்சமாக ஆயுள் தடையோ, 5 டெஸ்ட் போட்டிகள் அல்லது 10 ஒரு நாள் போட்டிகளிலோ ஹர்பஜன் விளையாட தடை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.