பெப்சி விளம்பரம்: கங்கூலி, திராவிட் நீக்கம்

செவ்வாய், 19 பிப்ரவரி 2008 (14:33 IST)
பெப்சி குளிர்பான விளம்பரங்களில் தோன்றி வந்த இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்களான ராகுல் திராவிட், சவ்ரவ் கங்கூலி ஆகியோரின் விளம்பர ஒப்பந்தங்களை பெப்சி நிறுவனம் முடித்துக் கொண்டுள்ளது.

இவர்களுக்குப் பதிலாக தற்போது பிரபலமடைந்து வரும் இரண்டு நட்சத்திரங்களான இஷாந்த் ஷர்மா, ரோகித் ஷர்மா ஆகியோரை பெப்சி நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

நீண்ட காலமாக பெப்சி நிறுவனத்தின் விளம்பர ஒப்பந்தத்தில் உள்ள சச்சின் டெண்டுல்கரின் ஒப்பந்தம் அப்படியே நீடிக்கிறது.

ரோஹித் ஷர்மா மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகியோரிடம் அணுகுமுறையும், ஆக்ரோஷமும் உள்ளது என்று பெப்சி இந்தியா நிறுவன துணைத் தலைவர் சந்தீப் சிங் அரோரா தெரிவித்துள்ளார்.

ராகுல் திராவிட், சவ்ரவ் கங்கூலி ஒரு நாள் போட்டி அணியிலிருந்து நீக்கப்பட்டதால் விளம்பர ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டனர், சச்சின் டெண்டுல்கர் பற்றி இப்போது பேசுவது சரியானதாக இருக்காது என்று கூறுகிறார் அரோரா.

2008ம் ஆண்டிற்கான பெப்சி விளம்பரங்கள் இளைஞர்களை கவரும் விதமாக "யே ஹை யங்கிஸ்தான் மேரி ஜான்" என்ற வாசகங்களுடன் ஏற்கனவே களைக் கட்டத் துவங்கிவிட்டது என்பது குறிப்பிடத் தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்