சென்னை சூப்பர் கிங்ஸ் அரையிறுதிக்குச் செல்லும்-ஹஸ்ஸி நம்பிக்கை

வெள்ளி, 2 ஏப்ரல் 2010 (20:56 IST)
ஐ.பி.எல். 3-வது கிரிக்கெட் தொடரில் இதுவ்ரை 8 ஆட்டங்களில் 3 ஆட்டங்களில் மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றிருந்தாலும் அரையிறுதிக்கு முன்னேறும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் மைக் ஹ்ஸ்ஸி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

"அரையிறுக்குச் செல்ல கடும் போட்டி நிலவுகிறது. 4 போட்டிகளில் தொடர் தோல்வியைச் சந்தித்தாலும் இது எங்களுக்கு முடிந்து விட்டது என்று கூறுவதற்கில்லை, தற்போது கேப்டன் மகேந்திர சிங் தோனீக்கு வீரர்கள் தேர்வில் கூடுதல் வீரர்கள் உள்ளனர்.

நானும் டக் போலிஞ்சரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைகிறோம், மீண்டும் சென்னை அணிக்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது." என்றார் மைக் ஹஸ்ஸி.

நாளை சென்னை சேப்பாக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் சென்னை மோதுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்