சர்வதேச ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் கோலி முதலிடத்தை பிடித்ததை அடுத்து சச்சின் சாதனையை முறியடித்துள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே நடைபெற்ற ஒருநாள் போட்டி தொடர் முடிவடைந்துள்ள நிலையில் ஐசிசி புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.
இதன்மூலம் கோலி சச்சின் சாதனையை முறியடித்து புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
விரைவாக 9000 ரன்களை கடந்து அதிலும் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் தென் ஆப்பரிக்க வீரர் டிவில்லியர்ஸ் 205 போட்டிகளில் 9000 ரன்களை கடந்து முதலிடத்தில் இருந்தார். தற்போது கோலி 202 போட்டிகளிலே 9000 ரன்களை கடந்து அவரது சாதனையை முறியடித்தார்.
ஐசிசி தரவரிசை பட்டியலில் 872 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த டிவில்லியர்ஸை இரண்டாம் இடத்துக்கு தள்ளி 889 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடம் பிடித்தார். 10 நாட்கள் இடைவெளியிலில் இரண்டம் இடத்துக்கு சென்று மீண்டும் முதலிடம் பிடித்தார்.
இதுவரை பேட்ஸ்மேன் ஒருவர் ஒருவருடத்தில் எடுத்த அதிகப்பட்ச புள்ளிகள் 887. சச்சின் 1998-ல் எடுத்திருந்ததே அதிகப்பட்ச புள்ளிகளாக இருந்தது. தற்போது விராட் கோலி 889 புள்ளிகள் எடுத்து சச்சின் சாதனையை முறியடித்துள்ளார்.