இந்த நிலையில் இந்தியாவின் இன்றைய ஸ்கோரில் ஒரு புதுமை ஏற்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய அணி இன்றைய இன்னிங்சில் 112 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள், 224 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் மற்றும் 336 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் என எடுத்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 112 ரன்கள் விகிதமாகவும் விக்கெட்டுகள் இரண்டு இரண்டாகவும் இருந்தது பெரும் ஆச்சரியத்தை அளித்தது