பிரதீப், மலிங்கா அசத்தல் பந்துவீச்சு: இலங்கை அபார வெற்றி

புதன், 5 ஜூன் 2019 (07:41 IST)
நேற்றைய உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இலங்கை அணி கொடுத்த 187 என்ற எளிய இலக்கை எட்ட முடியாமல் ஆப்கானிஸ்தான் அணி 152 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் மலிங்கா மற்றும் பிரதீப் அபாரமாக பந்துவீசி ஆப்கானிஸ்தான் விக்கெட்டுக்களை சுருட்டினர்
 
ஸ்கோர் விபரம்:
 
இலங்கை அணி: 201/10  36.5 ஓவர்கள்
 
பெரரே: 78
கருனரத்னே: 30
திரமின்னே: 25
லக்மால்: 15
 
ஆப்கானிஸ்தான் அணி: 152/10  32.4 ஓவர்கள் (இலக்கு 187/41 ஓவர்கள்)
 
நஜிபுல்லா ஜாட்ரான்: 43
ஹஜ்ரதுல்லா: 30
குல்பாதின் :23
முகமது நபி: 11
 
இந்த போட்டியில் மலிங்கா 3 விக்கெட்டுக்களையும் பிரதீப் 4 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுத்தனர். பிரதீப் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இன்றைய போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்