நேற்று நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி முதலில் பேட் செய்தது. அயர்லாந்து அணியின் கேப்டன் ஆண்டி பால்பர்னியின் அபார சதத்துடன் அந்த அணி முதலில் பேட் செய்த அயர்லாந்து 5 விக்கெட்டுகளை இழந்து 290 ரன்கள் எடுத்தது. இதையடுத்து ஆடிய தென்னாப்பிரிக்க அணிக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக இருந்தது அயர்லாந்து வீரர்களின் பந்து வீச்சு.