உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் - அரையிறுதியில் பி.வி.சிந்து

சனி, 4 ஆகஸ்ட் 2018 (15:36 IST)
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை சிந்து காலிறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்,
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவின் நான்ஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. 
 
நேற்றைய காலிறுதிச் சுற்றில் ஜப்பான் வீராங்கனை நோசொமி ஒக்குஹாராவும் இந்திய வீராங்கனை சிந்துவும் மோதினர். முதல் ஆட்டத்தில் சற்று பின்னே இருந்த சிந்து அதிரடியாக விளையாடி 21-17 என்ற கணக்கில் முதல் கேமை கைப்பற்றினார்.
 
பின் இரண்டாவது கேமில் 5-0 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை வகித்தார் நோசொமி. சுதாரித்துக் கொண்ட சிந்து தனது அதிரடி ஆட்டத்தை துவங்கினார். அதிரடியாக விளையாடி 21-19 என்ற கணக்கில் இரண்டாவது கேமையும் தன் வசமாக்கிக் கொண்டார் சிந்து.
சாம்பியன்ஷிப் போட்டியில் போட்டியிட்ட அனைத்து இந்திய வீரர் வீராங்கனைகளும் தோல்வியுற்று வெளியேறிய நிலையில் இந்திய வீராங்கனை சிந்து  அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். சிந்து அரையிறுதியிலும், பைனல்சிலும் வென்று கோப்பையை கைப்பற்றுவார் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்