புடவையுடன் அணிவகுப்பு: முட்டுகட்டை போட்ட இந்திய ஒலிம்பிக்ஸ்!

செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (16:57 IST)
ஆஸ்திரேலிய நாட்டின் கோல்ட் கோஸ்ட் நகரில் வரும் ஏப்ரல் 4 ஆம் தேதியில் இருந்து 15 ஆம் தேதி வரை காமென்வெல்த் விளையாட்டுப்போட்டிகள் நடைபெறுகின்றன. 5 வது முறையாக இந்த போட்டியை ஆஸ்திரேலியா நடத்துகிறது.
இதில் இந்தியா உள்ளிட்ட 70 நாடுகள் பங்கேற்கவுள்ளன. வழக்கமாக காமென்வெல்த், ஒலிம்பிக் ஆகிய போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி வீராங்கனைகள் தொடக்கவிழா நிகழ்ச்சியின் போது, புடவையும், பிளேசரும் அணிந்து தேசியக்கொடி பிடித்து அணிவகுத்து செல்வர்.
 
ஆனால், இம்முறை காமென்வெல்த் விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவில் இந்திய வீராங்கனைகளுக்கு புடவைக்கு பதிலாக பேன்ட், பிளேசர் வழங்க இந்திய ஒலிம்பிக் அமைப்பு முடிவு செய்துள்ளதாம். 
 
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இந்த முடிவை இந்திய வீராங்கனைகள் பலர் வரவேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்