நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. 155 என்ற எளிய இலக்கை நோக்கி ராயல் ராஜஸ்தான் அணி விளையாட நிலையில் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் ஜாஸ் பட்லர் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் 44 மற்றும் 40 ரன்கள் எடுத்த நிலையில் அதற்கு அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்தார். அதன் பிறகு வந்த பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்பிய காரணத்தினால் 20 ஓவர்களில் ராஜஸ்தான் 144 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது