2 மணி நேரம் தொடர் மழை: இந்தியா-நியூசிலாந்து போட்டி ரத்தாக வாய்ப்பு!
வெள்ளி, 18 நவம்பர் 2022 (13:20 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று வெலிங்டன் மைதானத்தில் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் டாஸ் கூட போட முடியாத நிலையில் அங்கு மழை பெய்து வருகிறது.
இன்று காலை 11 மணிக்கு இந்த போட்டி ஆரம்பிக்க இருந்த நிலையில் இன்னும் டாஸ் கூட போடவில்லை என்பதால் இந்த போட்டியை ரத்தாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
தற்போதைய நிலவரப்படி மழை தொடர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் குறைந்த ஓவர்கள் அடிப்படையில் கூட போட்டிகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வர்ணனையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்
இன்னும் அரை மணி நேரம் மழை விடவில்லை என்றால் போட்டி ரத்தாக அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்தியா நியூசிலாந்து போட்டியை காண மைதானத்திற்கு வந்த ரசிகர்கள் அதிருப்தியுடன் திரும்பிச் சென்று கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன