1000வது ஐபிஎல் போட்டி: ரோஹித் சர்மா பிறந்த நாளில் மும்பைக்கு கிடைத்த த்ரில் வெற்றி..!
திங்கள், 1 மே 2023 (07:15 IST)
கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் தொடங்கிய நிலையில் 15 ஆண்டுகளில் நடந்த ஐபிஎல் போட்டிகளில் நேற்று 1000வது ஐபிஎல் போட்டி நடந்தது. இந்த போட்டியில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய நிலையில் மும்பை அணி கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்றது
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் அடித்தது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் மிக அபாரமாக விளையாடி 62 பந்துகளில் 124 ரன்கள் அடித்தார்.
இதனை அடுத்து 213 என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 214 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் 18 ரன் தேவை என்ற நிலையில் டின் டேவிட் அபாரமாக முதல் மூன்று பந்துகளில் 3 சிக்ஸர்கள் அடித்து தனது அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.
நேற்று ஐபிஎல் 1000வது போட்டி மற்றும் ரோகித் சர்மா பிறந்த நாளை முன்னிடு மும்பை அணிக்கு கிடைத்த வெற்றி அவருடைய பிறந்தநாள் கிடைத்த பரிசாக பார்க்கப்படுகிறது.