உலக கால்பந்து போட்டிகளில் மிகவும் பிரபலமானவராக இருப்பவர் லியோனல் மெஸ்சி. அர்ஜெண்டினாவை சேர்ந்த இவர் தற்போது லா லிகா உள்ளிட்ட போட்டிகளுக்காக பார்சிலோனா அணியில் விளையாடி வருகிறார். கடந்த பல ஆண்டுகளாக பார்சிலோனா அணிக்காக மட்டுமே விளையாடி வரும் மெஸ்சியை கடந்த 2017ம் ஆண்டு முதல் தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு பார்சிலோனா அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
அதன்படி வருடத்திற்கு 1,217 கோடி ரூபாய் சம்பளம் என்ற வகையில் 4 ஆண்டுகளுக்கு மெஸ்சிக்கு தொகை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் பார்சிலோனா நிர்வாகம் இந்த செய்தியை உண்மையென்றோ, பொய் என்றோ ஒப்புக்கொள்ளாமல் குறிப்பிட்ட பத்திரிக்கை மீது வழக்கு தொடரப்போவதாக மட்டும் தெரிவித்துள்ளது.