2013 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற்ற 32 டெஸ்ட் போட்டிகளில் 25 போட்டிகளில் வெற்றியும், 1 போட்டியில் தோல்வியும் மற்ற போட்டிகள் டிராவும் ஆகியுள்ளன. இதற்கு முன்னர் ஆஸ்திரேலியா 10 டெஸ்ட் தொடர்களை சொந்த நாட்டில் வென்றுள்ளது. அந்த சாதனையை இப்போது கோலி தலைமையிலான இந்திய அணி முறித்துள்ளது. கோலி தலைமையேற்ற போது இந்திய அணி டெஸ்ட் அரங்கில் 7 ஆவது இடத்தில் இருந்தது. தற்போது இரண்டு ஆண்டு காலமாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.