ஐபிஎல்-2023; பெங்களூர் அணி டாஸ் வென்று அதிரடி முடிவு
திங்கள், 1 மே 2023 (19:47 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல்-2023- 16 வது சீசன் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில், பிளசிஸ் தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் லக்னோ சூப்பர் கெயிண்ட் அணி மோதுகின்றனது.
இரு அணிகளும் டாஸ் போட அழைக்கப்பட்டன. இதில், டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் டுபிளசிஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.
எனவே விராட் கோலி 9 ரன்களும், டுபிளசிஸ் 11 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். 3 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 20 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
இன்றைய போட்டியில் யார் ஜெயிப்பது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.