இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் கே எல் ராகுல் 6 ரன்களிலும் கேப்டன் கோஹ்லி 4 ரன்களிலும் அவுட் ஆகி ஏமாற்றமளித்தனர். அதன் பின் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர், ரோஹித் ஷர்மாவுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி வருகிறார்.