அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் கிட்டத்தட்ட அனைவருமே சொதப்பியதால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் மட்டுமே எடுத்தது. பொல்லர்டு மட்டுமே ஓரளவுக்கு நிலைத்து ஆடி 49 ரன்கள் எடுத்தார். பூரன் 20 ரன்கள் எடுத்தார். மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் சிங்கிள் டிஜிட் மட்டும் ஜீரோ ரன்கள் மட்டுமே எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடி இந்திய அணியும் இலக்கை எட்ட கொஞ்சம் திணறியது என்றே கூறலாம். இந்திய அணி 17.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 24 ரன்களும், கேப்டன் விராட் கோஹ்லி 19 ரன்களும், பாண்டே 19 ரன்களும் எடுத்தனர்