அதன் படி ‘ஒரு ஓவர் முடிந்ததும் ஓவர் முடிந்ததும் 45 வினாடியிலிருந்து கவுண்ட்டவுன் ஆரம்பிக்கும். இந்த நேரம், பந்தை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேனுக்கு 60 வினாடிகளாகவும், புதிய ஓவரை வீச வரும் வீச்சாளருக்கு 80 வினாடிகளாகவும் அதிகரிக்கப்படும். இதற்காக ஸ்கோர் போர்டில் எலக்ட்ரானிக் கடிகாரம் வைக்கப்படும். இதில் தாமதப்படுத்தினால் எதிர் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும். அதுபோல ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகள் போல டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இனி ப்ரீ ஹிட் அறிமுகப்படுத்தப்படும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இப்போது எஸ்.ஜி, கூக்கபுரா, டியூக்ஸ் ஆகிய பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இனி ஒரே மாதிரியாகத் தரமான பந்துகளை பயன்படுத்தப்படும்’ என அறிவித்துள்ளனர்.