இந்நிலையில், மேற்கிந்திய கிரிக்கெட் அணிவீரர் ஷமி தனது டுவிட்டர் பக்கத்தில் ஐசிசி மற்றும் ஏனைய கிரிக்கெட் போட்டிகளில் உள்ள நிறவெறிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் எனவும் இதுபோன்ற பிரச்சனைகளை நீக்காவிட்டால் அது தொடர்ந்து நடைபெற நாம் ஆதரவு அளிப்பது போல் ஆகிவிடும் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், தனது பதிவில் ஐபிஎல்லில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக நானும் இலங்கை வீரர் திசரா பெரோராவும் விளையாடிய போது எங்களை கலு என்று அழைத்தனர். இப்பொது தான் அதற்கான அர்த்தம் எனக்குத் தெரிகிறது. கலு கருப்பினத்தவர்களை குறிக்கும் வார்த்தை என வேதனை தெரிவித்துள்ளார்.