இந்நிலையில் அஸ்திரேலிய அணி வீரர் எட் கோவன், தன்னுடைய அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லாத காலக்கட்டத்தில் போட்டியில் நான் ஆடிக் கொண்டிருந்தேன், அப்போது கோஹ்லி முறையற்ற விதத்தில் ஒரு வார்த்தையை கூறினார்.
அது மிகவும் மரியாதை கெட்ட வார்த்தை, ஆனால் தான் எல்லை மீறிவிட்டோம் என்பதை கோலி உணரவில்லை. நடுவர் சீறிய பின்னர், கோலி என்னிடம் மன்னிப்புக் கேட்டார்.
ஆனால் அந்த கணம், ஸ்டம்பைப் பிடுங்கி அவரை குத்திவிடலாமா என்று நினைத்தேன். மேலும், நான் விராட் கோலியின் மிகப் பெரிய ரசிகன், என்னை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.