ஆரம்பம் முதலே சீரான் இடைவெளியில் விக்கெட்களை வீழ்த்திய வண்ணம் இருந்தது கொல்கத்தா அணி. இதனால் டெல்லி அணியால் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித் 39 ரன்களும், கேப்டன் ரிஷப் பண்ட் 39 ரன்களும் அதிகபட்சமாக சேர்த்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 20 ஓவர்கள் முடிவில் 127 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது டெல்லி அணியால்.