ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடக்க உள்ளன. இந்நிலையில் முதல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற கே கே ஆர் முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதையடுத்து களமிறங்கிய டெல்லி அணியில் ஆஸி அணியின் ஸ்டீவ் ஸ்மித் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப் பட்டார்.