இதனை அடுத்து 145 என்ற எளிய இலக்கை விரட்டிய ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்கார மயங்க் அகர்வால் அருமையாக ஆடியதால் கண்டிப்பாக ஹைதராபாத் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து விக்கெட் விழுந்ததாலும், டெல்லி அணியினர் அபாரமாக பந்து வீசியதாலும், ஹைதராபாத் அணி 20 அவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது
இதனை அடுத்து டெல்லி அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணிக்கு இந்த தோல்வியால் தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வி கிடைத்துள்ளது என்பதும் டெல்லிக்கு இரண்டாவது வெற்றி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் புள்ளி பட்டியலில் இரு அணிகளுமே கடைசி இரண்டு இடத்தில்தான் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.