இதன் காரணமாக அவர் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்தும் நீக்கப்பட்டார். கடைசி சில போட்டிகளில் அவர் மைதானத்துக்குள் கூட வர அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் அவர் நேற்றைய இலங்கைக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி மீண்டும் தன் பழைய ஆட்டத்திறனை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளார். நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடிய அவர் 42 பந்துகளில் 65 ரன்களை சேர்த்தார். வார்னர் பார்முக்கு வந்திருப்பது ஆஸி அணிக்கு கூடுதல் பலத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸி அணி அடுத்து இங்கிலாந்தை எதிர்கொள்ள உள்ளது.