ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் “மாஸ்கோ செஸ் ஓபன் போட்டித் தொடர்” நடந்து வருகிறது. அதில் கிறிஸ்டோஃபர் எனும் 9 வயது சிறுவன் ரோபோ ஒன்றோடு விளையாடியுள்ளார். அப்போது ரோபோவின் காய் நகர்த்தலுக்கு காத்திராமல் அவர் தன்னுடைய அடுத்த மூவ்-ஐ செய்தபோது அவரின் விரலைப் பிடித்து அழுத்தியுள்ளது அந்த ரோபோ. சிறுவன் வலியில் துடிக்க உடனடியாக அவனை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதில் சிறுவனின் விரல் முறிந்துள்ளது.