ஏற்கனவே கேப்டன் தரங்கா சஸ்பெண்ட் செய்யப்பட்டும், குணதிலகா காயம் காரணமாக வெளியே உள்ளனர். இந்த நிலையில் புதியதாக அணியில் சேர்க்கப்பட்ட சண்டிமாலும் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறுகிறார். 3வது போட்டியின்போது அவரது விரலில் காயம் ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக அவர் போட்டியில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டி ஆரம்பிப்பதற்குள் இன்னும் எத்தனை பேர் வெளியேறுகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்