அதையும் மீறி முதல் சிக்சர் அடித்தால் முதல் சிக்ஸருக்கு ரன் இல்லை என்றும் இரண்டாவது சிக்சர் அடித்தால் அந்த பேட்ஸ்மேன் அவுட் என்ற புதிய விதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அணிகள் விளையாடும் மைதானம் ஊருக்கு மத்தியில் இருப்பதால் வீரர்கள் சிக்ஸர்கள் அடிக்கும்போது மைதானத்திற்கு வெளியே சென்று அங்கு உள்ள வீடுகளின் மேல் விழுவதாகவும் இதனால் தங்கள் வீடுகள் சேதம் அடைவதாகவும் கிரிக்கெட் நிர்வாகத்திற்கு அந்த வீடுகளில் வசிக்கும் மக்கள் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரை அடுத்து இனிமேல் சிக்சர் அடிக்கக்கூடாது என பேட்ஸ்மேன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மைதானத்தின் அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் தொடர்ச்சியாக புகார் அளித்து வருவதால் சிக்ஸர் அளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து கிரிக்கெட் வீரர்கள் அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.