இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட்: 5 விக்கெட்டுக்களை இழந்த வங்கதேசம்!

வியாழன், 22 டிசம்பர் 2022 (14:13 IST)
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கிய நிலையில் இந்த போட்டியில் வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
 
இந்த போட்டி தற்போது 57 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் வங்கதேச அணி சற்று முன் வரை 5 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
வங்கதேச அணியின் மோனினுல் ஹக் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 65 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியை பொறுத்தவரை அஸ்வின், உனாகட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார். 
 
முன்னதாக இந்தியா வங்கதேசம் அணிகள் இடையே நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்