1989ம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிதான் சச்சின் டெண்டுலகர் என்னும் நாயகனை உலகுக்கு காட்டியது. சர்வதேச கிரிக்கெட்டில் முதல்முறையாக 30 ஆயிரம் ரன்களுக்கும் மேல் பெற்றவரும், டெஸ்ட் மேட்ச்சில் முதல்முதலாக இரட்டை சதம் அடித்தவர் என்கிற பெருமையெல்லாம் சச்சினையே சேரும். 2013க்கு பிறகு சச்சின் ஓய்வு பெற்று விட்டாலும் இன்னமும் கிரிக்கெட் என்றால் பலபேருக்கு சச்சின் தான் ஞாபகம் வருவார்!
சச்சின் தனது 16 வயதில் 1989ம் ஆண்டு நவம்பர் 15 அன்று கராச்சியில் விளையாடினார். இன்றுடன் சச்சின் சகாப்தம் தொடங்கி 30 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளது. இதை சிறப்பிக்கும் விதமாக 30 Years Of Sachinism என்ற வார்த்தையை கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். மேலும் #SachinTendulkar என்ற ஹேஷ்டேக் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகியுள்ளது.