இந்தப் போட்டிக்கான இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. காயம் காரணமாக தொடக்க வீரர் முரளி விஜய், சுழற்பந்து வீரர் ஜெயந்த் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக அபினவ் முகுந்த், கருண் நாயர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ராகுலும், அபினவ் முகுந்தும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆனால், இந்திய அணிக்கு தொடக்கம் அதிர்ச்சிகரமாக இருந்தது.
அபினவ் முகுந்த் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவர் ரன் எதுவும் எடுக்காமல் ஸ்டார்க் பந்தில் ஆட்டம் இழந்தார். 2-வது விக்கெட்டுக்கு ராகுலுடன், புஜாரா ஜோடி சேர்ந்தார். ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாய் புஜாரா அவுட் ஆனார்.