இந்நிலையில் நேற்று மதியம் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த சிறுவன் நிகித் என்பவர் பாதுகாப்பைத் தாண்டி மைதானத்துக்குள் சென்றுள்ளார். வீரர்கள் அனைவரும் கொரோனா பயோ பபுளில் இருப்பதால் அவரை சந்திக்க மறுத்துள்ளனர். பின்னர் காவலர்கள் அந்த சிறுவனை அழைத்துச் சென்றனர். அவர் சில வருடங்களுக்கு முன்னர் அஸ்வினிடம் பயிற்சி பெற்றதாகவும் அவரை சந்திக்கவே மைதானத்துக்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.