வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி ஆகியவை மஹாவிஷ்ணுவுக்கு உரியவை. பொதுவாக திதிகளில் சிறந்ததான ஏகாதசி திதியை மஹாவிஷ்ணுவிற்கு மிகவும் உகந்ததாக சாஸ்திரம் கூறுகிறது.
மஹாவிஷ்ணுவின் அருளும், கருணையும் மிகவும் அதிகமாகவும், பூரணமாகவும் விளங்கும் அரிதான நாளாக இந்த நாள் அமைந்து உள்ளது.
வளமான வாழ்க்கை அமையும்: விஷ்ணுபதி புண்ணிய கால தினத்திலே, விரத நாட்களில் செய்யக்கூடாத செயல்களை தவிர்க்க வேண்டும். எனவே அரிதான இந்த வாய்ப்பினைத் தவற விடாமல் இந்த விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலம் மகிழ்ச்சியும் செல்வ செழிப்பும் வளமான வாழ்க்கையும் அமையும்.