கோவில் கோபுரத்தின் உச்சியில் கலசங்கள் வைக்கப்பட்டதற்கான காரணங்கள் என்ன...?

கோவில் கலசங்கள் வெறுமனே அழகுக்காக மட்டும் வைக்கப்படுவதில்லை. இந்த கலசங்களில் உச்சியில், கூரிய முனை வழியாக வானத்தில் இருக்கும் உயிர் சக்தியை முழுமையாக அவற்றுள் கிரகித்துக் கொண்டு வெளியிடுகிறது. 


அந்த உயிர் சக்தியை நாம் தரிசித்து பெறுவதால் நமக்கு புத்துணர்ச்சி மனதில் தூய்மையும்,  நோய் எதிர்ப்பு சக்திகளும் கிடைக்கிறது.
 
மழை, வெய்யில் உட்பட இயற்கைச் சீற்றங்களில் இருந்து விக்ரகங்கள் பாதிக்கபடாமல் இருக்க வேண்டும். அதற்காக அழகிய விமானங்களை அமைத்தனர். விமானத்தில் கலசங்கள் வைக்கப்பட்டன. இந்த கலசங்கள் இடிதாங்கியாக செய்யப்பட்டு ஆலயத்தைப் பாதுகாக்கின்றன.
 
கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை கலசங்களுக்கு கொடுக்கின்றன.
 
கோபுரத்தின் உச்சியில் இருப்பதைப் போலவே ஒவ்வொரு கர்ப்பகிரக கோபுரத்தின் மேலும் கலசங்கல் இருக்கும். இந்த கலசங்களும் அதே போல் உயிர் சக்தியை  கிரகித்து கலசத்தின் நேர் கீழா உள்ள கர்ப்பகிரகத்தில் வீற்றிருக்கும், இறைவனின் பீடத்திற்கு அனுப்பி கொண்டிருக்கும்.
 
ஒவ்வொரு ஆலயத்திலும் கர்ப்பக்கிரத்தின் கிழக்கு அல்லது வடக்கு திசைகளில் அபிஷேக நீர் செல்வதற்காக துவாரம் அமைக்கப்பட்டு இருக்கும். இந்த துவாரத்தின்  வழியே செல்லும் அபிதேக நீரிலும் உயிர் சக்தி கலந்து வெளிப்படுகிறது.
 
இவ்வாறு தொடர்ந்து சக்திகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் காரணத்தினால் தான் ஆலயங்களில் சிலைகளின் குறுக்கே செல்லக் கூடாது என்று சொல்லி  வைத்தார்கள்.
 
கோபுரத்தைத் தரிசித்தாலே கோயிலுக்குச் சென்று இறைவனை வழிப்பட்டதற்கு சமம் என்று கூறி கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று பழமொழியை உண்டாக்கி வைத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்