பிரதோஷ வேளையில் நந்தியம்பெருமானுக்கு அருகம்புல் அல்லது வில்வ மாலை சாற்றி, நெய் விளக்கு ஏற்றி பச்சரிசி, வெல்லம் வைத்து பூஜை செய்யலாம்.
பிரதோஷ நேரத்தில் நமசிவாய மந்திரம் ஜெபிப்பதால், நமது முன்னோர்கள், ஏழு தலைமுறையினர் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும்.
தேவரும், கடவுளரும், முனிவர்களும் கூடி நின்று சிவனாரின் தாண்டவத்தை கண்டு பக்தி பரவசப்படும் நேரமது. பிரதோஷ வேளையின் மஹிமையை அறிந்தவர்கள் சிவனின் அளவில்லா கருணைக்கு பாத்திரமாக இந்த வேளையில் விரதமிருந்து, சிவனுக்கு பூஜை செய்கிறார்கள்.