பிரதோஷத்தன்று சிவ தரிசனம் செய்வதால் என்ன பலன்கள்....?

சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷ வழிபாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த வகையில் தை மாதப் பிரதோஷம் மிகவும் சிறப்பு  வாய்ந்ததாகும். 

தை மாதத்தில்தான் சூரியன் வட அரைக்கோளப் பகுதியில் பயணத்தை ஆரம்பிக்கும் உத்திராண்ய காலம் தொடங்குகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற  நம்பிக்கை அளிக்கும் தை மாத‌ம்.
 
நமது மனதில் தோன்றும் பல்வேறு சிந்தனைகளுக்கு மனோகாரகனான சந்திரனே காரணம். அதனால் சந்திரனை பிறையாக சூடிய எம்பெருமானை இந்நன்னாளில் தரிசிப்பது எண்ணிலடங்கா நன்மைகளை நமக்கு அருளும்.
 
அப்படியான பிரதோஷ தினத்தன்று மாலையில் 4 மணியிலிருந்து 6 மணிக்குள்ளாக சிவன் கோவிலுக்கு சென்று, பிரதோஷ தினத்தில் செய்யப்படும் சோம சூக்த வலம் வந்து நந்தி பகவானையும், சிவனையும், சண்டிகேஸ்வரரையும் வணங்க வேண்டும்.
 
புதன்கிழமையில் வரும் பிரதோஷம் "புதவாரப்பிரதோஷம்" ஆகும். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். புதன்கிழமை நாளில் வருகிற பிரதோஷத்தன்று சிவ தரிசனம் செய்தால் கடன் தொல்லை நீங்கும். சுபிட்சம் உண்டாகும். புத்திர பாக்கியம் கிடைக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்