காலையில் செய்யப்படும் சூரிய நமஸ்காரம் எதற்காக தெரியுமா..?

பண்டைய காலம் முதலே நமது முன்னோர்கள் சில முறைகளை பின்பற்றி வருகின்றனர். சூரிய நமஸ்காரம். உடல் மற்றும் மனது உறுதியடையவும் அமைதியடையவும் உதவும் ஆசாரம் இது. இதை விதி முறைகள் படி செய்யும் போது உடல் பாகங்களில் ஆற்றலும் சக்தியும் வருகின்றது.
சூரிய நமஸ்காரம் வாயிலாக நமது உடலில் உள்ள எல்லா மூட்டுக்களும் அசைவு ஏற்படுகிறது. சருமத்தில் விட்டமின் டி உற்பத்தி செய்யும் திறன் காலை சூரிய  கதிர்களுக்கு உண்டு. கல்சியம் உற்பத்தியை கட்டுபடுத்தும் திறனும் உண்டு என்பது அறிவியல் துறைகள் அங்கீகரித்து உள்ளன. மேலும் உறுப்புகளும் உறுதி  பெறுவதால் காச நோய் அணுக்களின் ஆக்கிரமிப்புகளும் தடுக்கின்றன.
 
தொடர்ச்சியாக சூரிய நமஸ்காரம் செய்வதனால் வயது முதிர்ச்சியையும் ஓரளவுக்கு நல்ல லாபகம் அடைகின்றன. தொப்பை வயிறு வருவதை தடுக்க இயலுகிறது. மனதுக்கும் உடலுக்கும் உற்சாகம் நிலைநிறுத்தவும் சூரிய நமஸ்காரம் உதவுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்