லகிமா: கனமான பொருளை லேசான பொருளாக ஆக்குவது, திருநாவுக்கரசரை, சமயம் பகை காரணமாக கல்லில் கட்டி கடலிட்ட போது, கல் மிதவையாகி உடல் மிதந்தது. லகிமா என்னும் சித்தமாகும்.
மகிமா: சிறிய பொருளை பெரிய பொருளாக ஆக்குவது வாமன அவதாரத்தில் திருமால் இரண்டடியால் மூன்று உலகங்களை அளந்தும், கிருஷ்ணன் அர்ச்சுனனுக்கும் உயர்ந்த வடிவம் காட்டி உலகமே தன்னுள் அடக்கம் என்று காட்டியதும் மகிமா என்னும் சித்தமாகும்.
பிரகாமியம்: வேண்டிய உடலை எடுத்து நினைத்தவரிடத்தில் அப்போதே தோன்றுதல் அவ்வையார் இளவயதிலேயே முதுமை வடிவத்தைப் பெற்றதும், காரைக்கால் அம்மையார் தன்னுடைய அழகான பெண் வடிவத்தை மாற்றி பேய் வடிவம் பெற்றதும் பிரகாமியம் என்னும் சித்தாகும்.
வசித்துவம்: ஏழு வகைத் தோற்றமாகிய தேவ, மானிட, நகர, மிருக, பறப்பன, ஊர்வன, மரம் முதலியனவற்றைத் தம் வசப்படுத்துதல் திருநாவுகரசர் தன்னைக் கொல்வதற்காக வந்த யானையை நிறுத்தியதும் ராமர் ஆல மரத்திலிருந்து ஒலி செய்து கொண்டிருந்த பறவைகளின் ஓசையை நிறுத்தியதும் வசித்துவம் என்னும் சித்தாகும்.