பிறகு முருகனிடம் அதை தனக்கு நினைவூட்டும் படி கூறிய போது முருகன் தன்னை குருவாக ஏற்றுக்கொண்டால் பிரணவத்தை உபதேசிப்பதாக கூறினார். சிவனும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு முருகனை மடியில் அமர வைத்துபிரணவ மந்திரமான “ஓம்” என்னும் மந்திரத்தை முருகன் உபதேசிக்க பெற்றுக்கொண்டு நினைவுகூர்ந்தார். இந்த சம்பவம் கும்பகோணத்தில் உள்ள சுவாமி மலையில்நிகழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்த தளம்மிகவும் சக்திவாய்ந்த தலமாக கருதப்படுகிறது.
முருகனைவழிபட சிறந்த மந்திரம் "ஓம் சரவணா பவ " என்பதாகும். “ஓம்” என்பது பிரணவத்தை குறிக்கிறது, “ச” என்பது வசீகரிக்கும் சக்தி கொண்டது “ரா” என்பது நம் வாழ்வில் வளத்தை சேர்க்கக்கூடியது “வ”என்பது துன்பம் வறுமை போன்றவற்றை நீக்கக்கூடியது. “ந” என்பது நம் வாழ்வின் பிரச்சனைகளைதீர்க்கக்கூடியது. “ப” என்பது ஈர்க்கும் ஆற்றலை கொண்டது. “வ” என்பது நம் வாழ்வின்எதிர்மறை சக்திகளை அழிக்கும் சக்தி கொண்டது.