பஞ்சமி தினத்தன்று வாராஹி அன்னைக்கு விரதமிருந்து வழிபட்டால் கிடைக்கும் பலன்கள் !!

பிரமாண்ட புராணம் வாராஹி தேவியின் மகிமைகளை விளக்குகிறது. பண்டாசுர வதத்துக்கு லலிதாம்பிகை புறப்படும் போது தேவி வாராஹியும் தன் கிரி சக்கரத்தில் எழுந்தருளினாள். 

அப்போது சுற்றியிருந்த தேவதைகள் வாராஹியை துவாதச நாமங்கள் சொல்லித் துதித்தனர். துவாதசம் என்றால் பன்னிரண்டு. இந்தப் பன்னிரண்டு நாமங்களைச் சொல்லித் துதித்து அன்னையை வழிபட்டால் சகல காரியங்களும் ஸித்தியடையும் என்கிறது பிரமாண்ட புராணம். 
 
1. பஞ்சமி, 2. தண்டநாதா, 3. சங்கேதா, 4. சமயேஸ்வரி, 5 சமய சங்கேதா, 6. வாராஹி, 7. போத்ரினி, 8. சிவா, 9. வார்த்தாளி, 10. மகா சேனா, 11. ஆக்ஞா சக்ரேஸ்வரி, 12. அரிக்கினி 
 
இந்தப் பன்னிரண்டு நாமங்களையும் ஒவ்வொரு பஞ்சமி அன்றும் அன்னையின் சந்நிதியில் அல்லது வீட்டில் அம்பிகையின் படத்துக்கு முன் நின்று சொல்லி வணங்க, தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியாகும். 
 
பூமி தொடர்பான தீர்க்க முடியாத பிரச்னைகள் இருந்தால் கட்டாயம் வழிபட வேண்டிய தெய்வம் அன்னை வாராஹி. அன்னையை பஞ்சமி தினத்தன்று விரதமிருந்து வழிபட்டால் பூமி தொடர்பான வழக்குகள் அனைத்தும் சாதகமாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்