செல்வச் செழிப்போடு வாழ நாம் வாழும் வீட்டில் துர்நாற்றம் வீசக்கூடாது; அப்படி வீசினால், பண வரவு குறைந்து கொண்டே இருக்கும். செல்வச் செழிப்போடு வாழ, நமது வீட்டில் நமது ஆடைகள், துணிகள் சிதறிக்கிடக்கக் கூடாது.
நமது வீட்டிற்குள் நுழைந்ததும், எப்போதும் நறுமணம் வீச வேண்டும். அப்படி இருந்தால், செல்வம் சேரத்துவங்கும். எங்கோ போக வேண்டிய பணம், நமது வீட்டை நோக்கி வரும். அதே சமயம் அனாவசியமான செலவுகளும் குறையும்.
பிரதி வெள்ளிக்கிழமைகளில் மாலை 5 மணிக்குள் நமது வீட்டை பெருக்கி,சுத்தம் செய்து,அலசிவிட்டுவிட வேண்டும். அலசியபின்னர், நமது வீட்டுப்பூஜையறையில் நெய்யில் தாமரை நூலில் தீபம் ஏற்றிட வேண்டும். அதன் பிறகு, 100 கிராம் உப்பு வாங்கி வருவது செல்வ வளத்தை நமது வீட்டிற்கு விரைவாகக் கொண்டு வரும்.
ஒருபோதும் இருட்டிய பின்னர், தயிர் சேர்த்த உணவுகளை சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால், எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும், அவன் வறுமைக்குள் விழுந்துவிடுவான்.