கோடையில் குழந்தைகளுக்கான உணவு

திங்கள், 7 ஏப்ரல் 2008 (12:40 IST)
பொதுவாகவே குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் உணவு மிகவும் சுத்தமானதாகவும், எளிதில் ஜீரணமாகக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

அதுவும் கோடைக்காலத்தில் அவர்களது உணவில் மிகுந்த எச்சரிக்கை உணர்வு தேவை.

பெதுவாக குழந்தைகளுக்கு இந்த கோடை காலத்தில் அதிகமாக வியர்க்கும். எனவே அவர்களது உணவு மேலும் உஷ்ணத்தை உண்டாக்கும் விதத்தில் அமைந்து விடக் கூடாது.

அதேப் போல கோடை தானே சென்று புளித்த தயிரையோ, மோரையோ மட்டும் ஊற்றியும் சாதம் கொடுத்துவிடக் கூடாது.

அதிகக் காரமில்லாமல் அவர்களுக்குப் பிடித்த உணவுகளை செய்து கொடுக்கலாம்.

காலையில் இட்லி, தோசை, சப்பாத்தி என அவர்கள் விரும்பும் காலை உணவைக் கொடுக்கலாம். ஆனால் ரவை உப்புமா போன்றவற்றை தவிர்த்துவிடுங்கள். ஏனெனில் ரவை உடல் சூட்டை அதிகரிக்கும்.

அதேப்போல காலை உணவிற்கும், மதிய உணவிற்கும் இடைப்பட்ட நேரத்தில் ஏதாவது ஒரு பழச்சாறு அளிக்கலாம்.

அல்லது உலர்த்த திராட்டையை தண்ணீரில் கொதிக்க வைத்து எடுத்து, அந்த நீரை அவ்வப்போது அளித்து வரலாம். தாகத்தையும் தணிக்கும். அதே சமயம் உடலை குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்ளும்.

தயிரை நன்கு கொதிக்க வைத்து அதனை சாதத்துடன் சேர்த்து மதிய உணவாக அளிக்கலாம்.

மேலும் பால் சாதம், பருப்பு சாதம், கீரை சூப் சாதம் போன்றவற்றையும் வாரம் ஒரு முறை வீதம் அளிக்கலாம்.

கீரை, கேரட் போன்றவை வாரத்தில் 2 முறை உணவில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்