26-ந் தேதி திருப்பதி கோவில் மூடப்படும்

செவ்வாய், 20 ஜனவரி 2009 (12:52 IST)
ஜனவ‌ரி 26-ந் தேதி சூரிய கிரகண ஏ‌ற்படுவதை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோ‌யில் மூடப்படும். அ‌ந்த நேர‌த்‌தி‌ல் ப‌க்த‌ர்க‌ள் யாரு‌ம் கோ‌யிலு‌க்கு‌ள் இரு‌க்க அனும‌தி ‌கிடையாது. ச‌ர்வத‌ரிசன‌த்‌தி‌ற்கான வ‌ரிசை‌யிலு‌ம் ப‌க்த‌ர்க‌ள் அனும‌தி‌க்க‌ப்பட மா‌ட்டா‌ர்க‌ள்.

ஜனவ‌ரி 26ஆ‌ம் தே‌திய‌ன்று சூ‌ரிய ‌கிரகண‌ம் ஏ‌ற்படு‌கிறது. அதனா‌ல் அன்று காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை தொடர்ந்து 7 மணி நேரம் ‌திரு‌ப்ப‌தி ஏழுமலையா‌ன் கோ‌யி‌ல் நடை சாத்தப்படும்.

26ஆ‌ம் தே‌தி அதிகாலையில் நடைபெறும் ஏகாந்த சேவைகளான சுப்ரபாதம், அர்ச்சனை, தோமால சேவைகள் முடிந்த பிறகு 8.30 மணி வரை சர்வதரிசனம் அனும‌தி‌க்க‌ப்படு‌ம். அதன் பிறகு ஆலயம் மூடப்படும்.

மாலை 4.30 மணிக்கு முறை‌ப்படி புண்ணியாவாசனம் எனப்படும் ஆலயத்தை தூய்மைப் படுத்தும் பணிகள் முடிந்த பிறகு 6.30 மணி முதல் பக்தர்கள் சர்வ தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் எ‌ன்று ‌திருமலை திருப்பதி தேவஸ்தான சிறப்பு நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்