ஆஸ்ட்ரேலியா அணிகளுக்கு இடையிலான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கிரிக்கெட் தொடரை இந்தியா கைப்பற்றும் என்று எமது ஜோதிடர் முனைவர் க.ப.வித்யாதரன் கணித்தது உண்மையானது.
webdunia photo
WD
இத்தொடரில் பெங்களூருவில் நடந்த முதல் போட்டியில் இந்தியா சுமாராகவே விளையாடும் என்று ஜோதிடர் கணித்ததைப் போல் அப்போட்டி டிராவில் முடிந்தது.
இதேபோல் மொஹாலி 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு கடைசி 2 நாட்கள் சாதகமானதாக இருக்கும் என்று கூறியிருந்தார். அதேபோல் இந்தியா அப்போட்டியை கடைசி 2 நாள் ஆதிக்கத்தை வெளிப்படுத்தி வென்றது.
டெல்லியில் நடக்கும் 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா நிச்சயம் வெற்றி பெறும் எனக் கூறியிருந்தார். ஆனால் வெற்றி பெற்றுவிடும் என்ற உறுதியான நிலையில் இருந்தும் இந்தியா அப்போட்டியை டிரா மட்டுமே செய்தது. இப்போட்டியில் ஹர்பஜன் இல்லாததால் இந்தியாவின் வெற்றி கைநழுவிப் போனதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
நாக்பூரில் நடக்கும் 4வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு அதிக வெற்றி வாய்ப்பு உள்ளதாக ஜோதிடர் கூறியிருந்தார். அதேபோல் இந்தியா அப்போட்டியில் 172 ரன் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியைப் பெற்று 2-0 என்ற போட்டிக்கணக்கில் இந்தியா தொடரைக் கைப்பற்றியுள்ளது.