இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்ட்ரேலிய அணி அக்டோபர் 9ஆம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை மொத்தம் 4 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கிறது.
அக்டோபர் 9-13ஆம் தேதி வரை பெங்களூருவில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தும்.
அக்டோபர் 17-21ஆம் தேதி வரை மொஹாலியில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டி இந்தியாவுக்கு கடினமாக இருக்கும். ஆனால் 20, 21ஆம் தேதிகளில் இந்தியாவுக்கு சாதகமான நிலை காணப்படுகிறது.
அக்டோபர் 29 முதல் நவம்பர் 2 வரை தலைநகர் டெல்லியில் நடக்கும் 3வது டெஸ்டில் இந்தியா நிச்சயம் வெற்றி பெறும்.
நவம்பர் 6-10ஆம் தேதி வரை நாக்பூரில் நடக்கும் இறுதி டெஸ்ட் போட்டியிலும் இந்தியாவுக்கு அதிக வெற்றி வாய்ப்பு உள்ளது.
எனவே முதல் டெஸ்டில் மோசமாக ஆடினாலும், 3வது, 4வது டெஸ்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்துவதன் மூலமாக இந்தியா தொடரைக் கைப்பற்றும்.