இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டபோது கார் டிரைவரின் செல்போன் சிக்னல் யுவன்ஷங்கர் ராஜா வீடு அருகிலேயே இருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர் யுவனின் வீட்டில் விசாரணை செய்தபோது வழக்கமாக நிறுத்தும் இடத்தில் கார் இல்லை என்பதாலும் கார் டிரைவர் போனை எடுக்கவில்லை என்பதாலும் புகார் அளித்ததாக தெரிவித்தனர்
இந்த நிலையில் அதே அபார்ட்மெண்டின் இன்னொரு கார் பார்க்கிங்கில் சென்று பார்த்தபோது அங்கு யுவனின் கார் இருந்தது. மேலும் காரின் அருகிலேயே டிரைவர் தூங்கி கொண்டிருந்தார். அவரை எழுப்பி விசாரணை செய்தபோது வழக்கமாக கார் நிறுத்தும் இடத்தில் வேறொரு கார் நின்றிருந்ததால் இங்கே நிறுத்தியதாகவும், அசதியாக இருந்ததால் தூங்கிவிட்டதாகவும், செல்போனில் சார்ஜ் இல்லாததால் சுவிட்ச் ஆப் ஆகிவிட்டதாகவும் கூறினார்.