கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார் - வைரமுத்து மீது பெண் பத்திரிக்கையாளர் புகார்

செவ்வாய், 9 அக்டோபர் 2018 (11:29 IST)
கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் பத்திரிக்கையாளர் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
பெண் பத்திரிக்கையாளர், கவிஞர், பாடலாசிரியர் என பல முகம் கொண்ட சந்தியா மேனன் என்பவர் தனது முகநூலில் ஒரு பதிவை இட்டிருந்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
 
எனக்கு அப்போது வயது 18. பாடல் வரிகளை எழுதுவது தொடர்பாக அவரிடம் பயிற்சி எடுக்க சென்றிருந்தேன். அதுபற்றி விவரிப்பதாக கூறி என் அருகே வந்த அவர் என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அங்கிருந்து ஓடி வந்துவிட்டேன்.  அதன்பின் பயிற்சி பெறும் குழுக்களில் ஒருவராக நான் இருந்தேன். அவருக்கு அரசியல் பின்னணி இருப்பதால் அவரை பற்றி பேச அனைவரும் தயங்குகின்றனர்.  அதை பயன்படுத்தி தன்னை பற்றிய விவரங்கள் வெளியே வராமல் அவர் பார்த்துக்கொள்கிறார். எனக்கும் அது நடந்தது. இது உண்மை” என அவர் தெரிவித்துள்ளார்.

 
அதேபோல், வைரமுத்து பற்றி தான் பேச தொடங்கியதால், தன்னைப் போல் பாதிக்கப்பட்ட வேறுஒரு பெண்ணும் சில உண்மைகளை கூறியிருக்கிறார் எனக்கூறி அப்பெண்ணின் டிவிட்டை வெளியிட்டுள்ளார். ஆனால், அதில் அவரின் பெயர் மறைக்கப்பட்டுள்ளது.
 
கவிஞர் வைரமுத்து மீது பெண்கள் பாலியல் தொல்லை புகார்களை கூறி வருவது திரைத்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்