ராமேஸ்வரத்தில் விமான நிலையம் ஏன் அமைக்கக் கூடாது? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

திங்கள், 2 நவம்பர் 2020 (16:07 IST)
சிவகங்கை செட்டிநாட்டுப் பகுதியில் விமான நிலையம் அமைக்க கோரிய வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தபோது, அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மத்திய மாநில அரசுகளுக்கு அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
சிவகங்கை செட்டிநாட்டுப் பகுதியில் விமான நிலையம் அமைக்க கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, இராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைப்பதற்கு அரசு ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? என கேள்வி எழுப்பியது 
 
இந்தியாவின் தென் மூலையில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைப்பது குறித்து மத்திய மாநில அரசுகள் ஏன் ஆலோசனை செய்யவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர் 
 
மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் இந்த கேள்வியால் ராமேஸ்வரம் பகுதி மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. அதுமட்டுமின்றி விரைவில் மத்திய மாநில அரசுகள் ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்க ஆலோசனை செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்